நித்யானந்தா கோஷ்டி மயக்கி கடத்திய டாக்டர் உட்பட 2 பேர் பிடதியில் இருந்து மீட்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி : நித்யானந்தா சீடர்களின் மூளைச்சலவைக்கு மயங்கி 2 பேர் பிடதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்கரன் என்பவர் ஜெயமங்கலம் போலீசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை நித்தியானந்தாவின் சீடர்கள் மூளைச்சலவை செய்ததாக தெரிவித்தார். இதில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அறியாத இருவரும் எங்களின் பேச்சையும் மீறி நித்யானந்தாவில் பிடதி ஆசிரமத்திற்கு சென்று விட்டனர்.

2 from Theni rescued from Nithyanandha Bidadi ashram

நித்யானந்தா சீடர்களின் பேச்சில் மயங்கி பிடதி ஆசிரமம் சென்றவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று பாஸ்கரன் தன்னுடைய புகாரில் கூறி இருந்தார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் மனோஜ், நிவேதாவை மீட்டுள்ளனர். அவர்களை ஜெயமங்கலம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Parent from Theni district filed complaint against Nithyanandha disciples that they brainwashed their children and brought them to Bidadi ashram followed by the complaint police rescued the 2 and the investigation is underway.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற