For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் கைது வழக்கில் 2 பாக். தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு- விரைவில் கைது?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் ஹூசேன் கைது செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களைக் கைது செய்ய தமிழக அரசு தீவிரம்காட்டும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் பிடிபட்ட ஜாகிர் ஹூசேன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா ஆகியோர் உத்தரவில்தான் தாம் உளவு பார்த்ததாக கூறியிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து இந்த 2 அதிகாரிகள் பெயரை எப்.ஐ. ஆரில் சேர்த்திருக்கிறது சென்னை போலீஸ். இதனால் இந்த இரு அதிகாரிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை கைது செய்வது எளிதான ஒன்று அல்ல என்பதால் அத்தனை சட்ட வழிகளையும் தமிழக போலீசார் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

English summary
In a significant move, names of two "officials" working in the Pakistan High Commission in Colombo have been included in an FIR filed against suspected ISI agent Mohammed Zahir Hussain, highly placed police sources said here Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X