வேலூரில் பரபரப்பு: திடீர் என தீப்பிடித்து எரிந்த 2 கோவில் தேர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன- வீடியோ

  வேலூர்: வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.

  உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன.

  2 temple chariots catch fire in Vellore

  மேலும் தீ விபத்தில் சேதம் அடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை வேறு இடிந்து விழுந்தது. இந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலில் நின்று கொண்டிருந்த 2 தேர்கள் நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன.

  இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  2 chariots of Mariamman, Ponniamman temple in Vellore caught fire in the midnight. People rushed to the spot and doused the fire. Police are investigationg about the fire accident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற