For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை குண்டுவெடிப்பில் காயமடைந்த 14 பேரில் 3 பேருக்கு செவித்திறன் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காயமடைந்த 14 பேரில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்ட நிலையில் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களில் 3 பேருக்கு காதில் செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

3 injured passengers lose their hearing ability

இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடித்த போது ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த 3 பேருக்கு பலத்த காயங்களுடன் செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் இவர்கள் 3 பேரும் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ள 6 பேரின் கால்களிலும் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளன. சில குண்டுகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இருப்பினும் சிலருக்கு சில குண்டுகள் சதைகளுக்குள் புதைந்து போய் விட்டன.

இதை எடுக்க முடியாது. அதேசமயம் இவை இருப்பதால் ஆபத்து இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
3 injured passengers in Chennai bomb blast have lost their hearing ability, doctors told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X