தமிழகத்தில் 5,000 பேருக்கு டெங்கு... ஆனால் அமைச்சர் இல்லை என்கிறார்... அன்புமணி புகார்
தமிழகத்தில் 5,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கிய நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், ஆனால் அரசுத் தரப்பில் டெங்குவெல்லாம் இல்லை என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர் என்றும்
சென்னை: தமிழகத்தில் 5,000 பேர் டெங்கு பாதித்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டெங்கு இல்லை என்று மறுக்கிறார் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"மேற்கு மாவட்டத்தை மட்டும் அச்சுறுத்திக் கொண்டிருந்த டெங்குக் காய்ச்சல் இப்போது தலைநகரம் சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
சேலம், கோவை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்தான் டெங்கு காய்ச்சலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோவை, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர்.

5,000 பேர் டெங்குவால் அவதி
தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் கூட, கடந்தகால அனுபவங்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதையும் தாண்டி டெங்கு பரவினால் அதை நவீன மருத்துவம் மூலம் குணப்படுத்துவதும் சாத்தியமான விஷயம்தான்.

7 ஆண்டு அழையா விருந்தாளி டெங்கு
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் அழையா விருந்தாளியாக வந்து செல்லும் நிலையில், வட்டார மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிப்பதற்குக் கூட வசதிகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே சுகாதாரத்துறை எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

டெங்கு பரவுவதை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்
டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்த வேண்டுமானால், முதலில் அந்தக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எதைக் கேட்டாலும், அவரது காதில் "தமிழகத்தில் குட்கா உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறதா'' என்று கேட்பதைப் போலவே விழுகிறதோ, என்னவோ, பதறியடித்து அதெல்லாம் ஒன்றும் தமிழகத்தில் இல்லை என்று பதில் கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

டெங்கு விழிப்புணர்வு வேண்டாம்
டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு இதுதான் முதன்மையானக் காரணமாகும். டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை.

குணப்படுத்த முடியும்
டெங்கு காய்ச்சலுக்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம். பப்பாளி இலைச்சாறு, மலை வேம்புச் சாறு ஆகியவற்றை காய்ச்சிக் குடிப்பதன் மூலமும், நில வேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும்.

ஏடீஸ் கொசுக்களை தடுக்க வேண்டும்
இதற்கெல்லாம் மேலாக டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

பசுமைத் தாயகம் நிலவேம்பு கஷாயம்
டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும், நோய்த தடுப்பு நடவடிக்கைகளிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு சிறப்பாகப் பங்களித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்புக் கசாயம் மக்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications