கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், விரட்டியடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்தக்கோரி மீனவர்கள் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு, சிறைபிடித்து செல்லபடுகின்றனர்.
நேற்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 593 விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இங்கு மீன்பிடிக்க வரக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள் என கூறி அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசரமாக கரைக்கு திரும்பினர்.
இந்நிலையில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது படகில் 5 பேர் சேர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்து சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 120 பேர் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு சாதகமாக இருந்தும், டச்சு, போர்சுகீசிய மன்னர்கள் காலத்து வரைபட சாட்சியங்கள் இருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக 1954-ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலேயே கூட இல்லாத கட்சத் தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் தமிழக மீனவர்களை கண்ணீர்க் கடலில் தள்ளிய பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications