Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பிறந்த குழந்தை! பதறி போன பெற்றோர்! 76 வயதில் இப்படி ஒரு கொடூர வேலையா?

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே 13 வயது சிறுமியை 76 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது நீதிமன்றம் 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேத்தியாகக் கருத வேண்டிய 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு குழந்தை பெற்றெடுக்கவும் காரணமாக இருந்த கொடூரனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கொடூரம்

கொடூரம்

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ விசாரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் அவரது தாய் கூலி வேலைக்கு சென்று மகளை வளர்த்து வந்துள்ளார். தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.

76 வயது முதியவர்

76 வயது முதியவர்

அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்ற எழுபத்தி ஆறு வயது முதியவர் வியாபாரம் தொடர்பாக சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தந்தை இல்லாததை அறிந்து தான் தனது பேத்தியாக கருதி வளர்ப்பதாக கூறி சிறுமையை பார்க்கும் போதெல்லாம் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். சிறுமியின் தாயும் 76 வயது முதியவர் தானே என சிறுமியிடம் பழக அனுமதித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் சிறுமியிடம் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்துச் சென்ற முதியவர் அன்வர் பாஷா ஆசை ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்த கொடூரம் நீண்டு இருக்கிறது. இதனால் 13 வயதிலேயே சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்குப் பிறகு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது.

நள்ளிரவில் குழந்தை

நள்ளிரவில் குழந்தை

வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என நினைத்து அவரது தாய் அருகில் உள்ள மருந்து கடையில் சிறுமிக்கு மாத்திரைகளை வாங்கித் தந்திருக்கிறார். வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி வயிற்று வலியால் அலறி துடிக்க அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பல மாதங்களாக முதியவர் அன்வர் பாஷா தன்னை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்த குறித்து சிறுமி கூறியுள்ளார்.

23 ஆண்டுகள் சிறை

23 ஆண்டுகள் சிறை

இதையடுத்து அவரது தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவர் அன்வர் பாஷா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அன்வர் பாஷாவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையானது வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது விசாரணை முடிவில் அன்வர் பாஷா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறை தண்டனையும் போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை பத்தாயிரம் அபராதம் என மொத்தம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அன்வர் பாஷாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+