For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் - நெசவு தொழிலாளி மரணத்தால் வன்முறை - போலீசை தாக்கியதாக 92 பேர் கைது

சேலம் இளம்பிள்ளையில் நெசவு தொழிலாளி மரணத்தை அடுத்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 92 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள இடங்கணசாலை கிராமம், கோனேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன், 22. விசைத்தறி நெசவுத்தொழிலாளியான இவர், சனிக்கிழமையன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளம்பிள்ளையிலிருந்து, சின்னப்பம்பட்டி செல்லும் வழியிலுள்ள கூட்டத்து புளியமரம் பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு, சரவணன் வந்தபோது, போலீசார் கையை காட்டி பைக்கை ஓரமாக கொண்டு வந்து நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். போலீசாரை பார்த்து பயந்த சரவணன் அப்படியே திருப்பிக்கொண்டு வந்த வழியாகவே செல்ல முயன்றார். எதிர்பாராத விதமாக ஜல்லி லோடு ஏற்றி வந்த மினி டெம்போ வேன், சரவணன் மீது மோதியது.

92 person arrest for attack police officials after youth dies in accident

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த இடத்தில் இருந்த போலீசாரை தாக்கினர். இதையறிந்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், சம்பவ இடத்திற்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் தாக்கினர். படுகாயம் அடைந்த ஆய்வாளர் ராஜாரணவீரன், தனியார் மருத்துவமனையிலும், எஸ்.எஸ்.ஐ பழனிச்சாமி, இடைப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கி இருந்த மகுடஞ்சாவடி போலீசாரின் இரு மோட்டார் பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால், போலீசார், பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர், இறந்த சரவணன் உடலை எடுக்க விடாமல், பொதுமக்கள் தொடர்ந்து அடம் பிடிவாதமாக நின்றுகொண்டு போராட்டம் நடத்தியதால், சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் டி.ஐ.ஜி., நாகராஜன், எஸ்.பி., இராஜன், சங்ககிரி ஆர்டிஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மக்களை அப்புறப்படுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தையும், சரவணனின் உடலையும் மினி ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களையும் சடலத்தை மினி ஆட்டோவில் ஏற்றக்கூடாது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் தான் ஏற்ற வேண்டும் என, பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீஸ் அதிவிரைவு வாகனத்தில், சரவணனின் உடலை ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக சரவணனின் சொந்த ஊரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

சாலை மறியல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் இருந்து, அடையாளம் காணப்பட்டு, இடங்கணசாலை, புளியம்பட்டி, கே.கே.நகர், தப்பகுட்டை, புளியம்பட்டி, பாப்பாபட்டி, கோனேரிப்பட்டி, கூட்டத்து புளியமரம் மற்றும் பனங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த, 92 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், சங்ககிரி ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஜெயமணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary
92 Villagers arrested by Salem police, after a 22year-old youth died in a road accident near Elampillai on Saturday evening. Villagers attack police officials burned police vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X