ஆசிரியர் திட்டியதால் தீ வைத்துக்கொண்டேன்- வேலூர் பள்ளி மாணவன் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் பள்ளி மாணவன் கோவிந்தன் தமக்குதாமே தீ வைத்துக் கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியில் கோவிந்தன் என்ற மாணவன் 9ம் வகுப்பு பயின்றுள்ளான். சக மாணவனின் பர்ஸை திருடிய கோவிந்தனை ஆசிரியர் கண்டித்ததால் அவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

9th std boy burnt near Vellore

வேலூர் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியில் கோவிந்தன் என்ற மாணவன் 9ம் வகுப்பு பயின்றுள்ளான்.

சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் கோவிந்தனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியானது. தீ காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் சிறுவன் சிகிச்சைக்காக திருப்பத்தூர்அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டான்.

அங்கு 40 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வர உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனை கடத்தி தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார்.

சகமாணவனின் பர்சை திருடியதால் ஆசிரியர் திட்டியதாகவும், அவமானத்தில் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
A 9th starndard boy was burnt alive near Vellore. He has been rescued and admitted in the GH.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X