இரு அணிகளும் இணையக் கோரி ஜெ.நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பரிதாபமாக பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் கடந்த 15ஆம் தேதி விஷம் குடித்த அதிமுக தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக இரு அணிகளாக உடைந்ததால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் சொர்ணம். 65 வயதான அதிமுக தொண்டரான இவர், ஜெ மறைவுக்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

A ADMK worker died in the hospital who was drinking poison in the Jayalalitha's memorial

கடந்த 15ஆம் தேதி சென்னை வந்த அவர் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி திடீரென தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்துள்ளார்.

உடனடியாக அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சொர்ணம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A ADMK worker died in the hospital who was drinking poisen in the Jayalalitha's memorial on 15th of this month.
Please Wait while comments are loading...