சென்னை பிராட்வே சாலையில் திடீர் பள்ளம்.. கடும் போக்குவரத்து நெரிசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பிராட்வே பிரகாசம் சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எல்ஐசி, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது.

A big hole occured in chennai bradway road

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அருகே சர்ச் பார்க் பள்ளி முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அதிலிருந்து ரசாயன திரவங்கள் கொப்பளித்ததாகவும் கூறப்பட்டது. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடுவே சுமார் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A big hole occured in Bharathi Arts College near bradway road due to metro train project.
Please Wait while comments are loading...