ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்த கல்லூரி மாணவி.. விஷயம் அம்பலமானதால் அவமானத்தில் தற்கொலை!

சித்தூர்: ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்த கல்லூரி மாணவி விஷயம் அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டார்.
காதல், ஒருதலைக் காதல் மற்றும் கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்துள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரியவரவே அவமானத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் சங்கீதா அங்குள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

மூன்று பேருடன் காதல்
சங்கீதா ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்து வந்ததாக தெரிகிறது. தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவர், ராணுவத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் மற்றும் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் ஒரு நபர் என மூன்று பேரை அவர் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.

வீடு வரை சென்ற காதலர்கள்
இதனால் அவர்கள் மூன்று பேருக்குள்ளும் சங்கீதா யாரை காதலிக்கிறார் என தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சங்கீதாவிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என மூன்று பேரும் கடந்த 27ஆம் தேதி சங்கீதாவின் வீட்டிற்கு சென்றனர்.

மூவரும் தகராறு
அப்போது அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் விழித்துள்ளார் சங்கீதா. இதனால் அவர்கள் மூவரும் சங்கீதா குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளனர்.

அவமானப்பட்ட சங்கீதா
சங்கீதா செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த அவரது பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவமானத்தில் மன உளைச்சலுக்கு ஆளானார் சங்கீதா.

போலீஸில் புகார்
தகாராறுக்கு பின் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து சங்கீதாவின் பெற்றொர் போலீஸில் புகார் அளித்தனர்.

கிணற்றில் இளம் பெண் பிணம்
இந்நிலையில் ரெட்டிகுண்டா பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இளம்பெண் ஒருவரின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் சங்கீதாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சங்கீதா தற்கொலை
சம்பவ இடத்துக்கு வந்த சங்கீதாவின் பெற்றோர் பிணமாக கிடப்பது தங்களின் மகள்தான் என்பதை உறுதி செய்தனர். ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்த விஷயம் அம்பலமானதால் ஏற்பட்ட அவமானத்தில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!