என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சீனி என்கிற சீனிவாசன் (வயது 20) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருப்பத்தூரில் அதிர்ச்சி
இந்த கொடுமை பல மாதங்களாக நீடித்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். சிறுமியின் வயிறு பெரிதாக இருந்த நிலையில், வயிற்றில் ஏதோ கட்டி இருக்கலாம் என நினைத்து சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மாணவி தன்னுடைய தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளர்.

மாணவிக்கு பிரசவம்
இதனையடுத்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் கைது
தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் தாய் மூலம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய சீனு என்கிற சீனிவாசனை போலீஸார் கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications