இறுதிச்சடங்கிற்கு பணம் வைத்துவிட்டு சென்னையில் வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அய்யப்பன்தாங்கலில் இறுதிச்சடங்கிற்கான பணத்தை வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் மனோகரன், ஜீவா என்ற வயதான தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்கள் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

A elderly couple commit suicide in Chennai Ayyappanthangal

தங்களின் இறுதிச்சடங்கிற்காக அவர்கள் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர்கள் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி சென்னை பாடிபுதூரில் வயதான தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் சென்னை அய்யப்பன்தாங்களில் இறுதிச்சடங்கிற்கு பணம் வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
A elderly couple commit suicide in Chennai Ayyappanthangal. They have keeping money for their last rites. And the couple written suicide note also.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற