ஏலகிரி கோடை விழா... பயங்கர டிராஃபிக் ஜாம்.. மக்கள் பெரும் அவதி!
ஏலகிரி கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வேலூர்: ஏலகிரி கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும இயக்கப்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வெயிலூரான வேலூருக்கு சற்றே இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஏலகிரி மலை. கோடைவாசஸ்தலமான இந்த ஊர் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.
வேலூர் ஜோலார்பேட்டை அருகே மலையில் இந்த இடம் உள்ளது. எந்த வித பருவகாலத்திலும் ஒரே மாதிரியான தட்ப வெப்பநிலை இங்கு நிலவுகிறது.

குவியும் சுற்றுலாப் பயணிகள்
இதனால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர்.

ஏலகிரி கோடை விழா
அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகுசவாரி செய்து மகிழ்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏலகிரியில் ஆண்டுதோறும் கோடைவிழா கொண்டாடப்படுகிறது.

குவிந்த பயணிகள்
இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றன.

இன்றுடன் நிறைவு
இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் - அவதி
கோடை விழாவை முன்னிட்டு மக்கள் குவிந்து வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கோடை விழாவை முன்னிட்டு அரசு முறையாக முன்னேற்பாடுகளை செய்யாததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications