Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடப்பாவிகளா.. குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மன நலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை

திருவள்ளூர் அருகே குழந்தை கடத்தும் நபர் என கூறி மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்த மூதாட்டி கொலையில் உருக்கமான தகவல்.. 23 பேர் கைது

    திருவள்ளூர்: குழந்தை கடத்தும் நபர் என கூறி மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீப காலமாக குழந்தை கடத்தும் வட மாநில கும்பல் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சுற்றி வருவதாக வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவி வருகிறது.

    இதனால் பல இடங்களில் புதிதாக வரும் அடையாளம் தெரியாத நபர்களை கிராம மக்கள் அடித்து உதைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

    மூதாட்டி அடித்து கொலை

    மூதாட்டி அடித்து கொலை

    நேற்று திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்ற 65 வயது மூதாட்டியை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.

    4 தனிப்படைகள் அமைப்பு

    4 தனிப்படைகள் அமைப்பு

    படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 67 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாலத்தில் தொங்கவிட்டு

    பாலத்தில் தொங்கவிட்டு

    இந்நிலையில் திருவள்ளூர் அருகே குழந்தை கடத்தும் நபர் எனக்கூறி 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். அவரின் உடலை பாலத்தில் இருந்து தொங்கவிட்டுள்ளனர்.

    கண்களை தோண்டி

    கண்களை தோண்டி

    மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபர் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அவரை குழந்தை கடத்தும் நபர் என கூறி அடித்து உதைத்த பொதுமக்கள் அந்த நபரின் கண்களை தோண்டியும் மூக்கை உடைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எஸ்பி எச்சரிக்கை

    எஸ்பி எச்சரிக்கை

    இதனிடையே திருவள்ளூர் மாவட்ட மக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், வட மாநில மக்கள் மீது சந்தேகம் இருந்தால் புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்தின் பேரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது என்றும் சிபிசக்கரவர்த்தி எச்சரித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+