வீட்டில் கஞ்சா பதுக்கிய சப்இன்ஸ்பெக்டர் கைது.. புழல் சிறையில் அடைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராயப்புரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுந்தரவடிவேலு. இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

A police special sub inspector Sundara vadivelu was arrested for keeping cannabis

இதையடுத்து சென்னை ராயப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டில் உள்ள இரண்டு பைகளில் இரண்டரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A special sub inspector Sundara vadivelu was arrested for keeping cannabis in his home. He was produced in the court and was detained in Chennai Puzhal Jail.
Please Wait while comments are loading...