சாரி மாமா..நான் போய் சேர்ந்துடுவேன்! கழற்றி விட்ட காதலன்.. விஷம் குடித்த வீடியோவை அனுப்பிய பெண் பலி!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் ஒருவர் பொவாண்டோ குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஷம் குடித்த வீடியோவை அந்தப் பெண் காதலனுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளதும் தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சரண்யா (வயது 23) இவர் பிளஸ் டூ படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

இதனால் தாயார் மனோன்மணி ஏன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் சரண்யா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து கடந்த 11ஆம் தேதி பொவாண்டோ குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது.

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


இதனால் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் இருந்த தாயார் மனோன்மணியுடன் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சகோதரி கார்த்திகா நேற்று நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு


விசாரணையில் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொவாண்டோ குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஷம் குடித்த வீடியோவை அந்தப் பெண் காதலனுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளதும் தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 காதல்

காதல்

சரண்யாவின் தந்தை சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் அவரது தாயார் மனோன்மணி கூலி வேலை செய்து தங்கை சரண்யாவையும் அவரது அக்கா கார்த்திகா என்பவரையும் வளர்த்து வந்திருக்கிறார். சரண்யா கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எம் ஏ முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அதே நேரத்தில் சரண்யா சுமார் மூன்று வருடங்களாக புதுப்பேட்டை அனுசாகரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

தற்கொலை வீடியோ

தற்கொலை வீடியோ

தற்போது அருண் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருண் பேசவில்லை என கூறப்படுகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல நாட்களாக சரண்யா மனவிரக்தியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த 11ஆம் தேதி வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தனியாக இருந்தபோது எலி பேஸ்ட்டை சரண்யா பொவண்டோ குளிர்பானத்தில் கலந்து குடித்து விட்டதும் அதனை வீடியோவாக எடுத்து அருணுக்கும் அவர்களது உறவினருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 என்ன பேசினார்?

என்ன பேசினார்?

அந்த வீடியோவில் பேசியிருக்கும் சரண்யா," சாரி மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன்.. நான் இனிமே கண்டிப்பாக திரும்பி வரமாட்டேன்.. அவ்வளவுதான் நான் போய் சேர்ந்து விடுவேன்.. நல்லபடியாக சந்தோஷமாக இரு மாமா. என் அம்மாவை பார்த்துக்க. நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை உனக்கு புரிய வைத்தேன். உனக்கு புரியாமல் நீ உன் பாட்டுக்கு பேசிட்ட.. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்,, நல்லபடியா சந்தோஷமா இரு,, இனிமேல் நான் உன் லைஃபில் இல்லை.. அவ்வளவுதான் நான் போய் சேர்ந்து விடுவேன்" என பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+