ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்... காலக்கெடு இல்லை: உணவுத்துறை
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால நிர்ணயம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் அதே நேரத்தில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை என உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் எண்களை ஆதார் எண்களுடன் இணைக்க நவம்பர் 1ம் தேதியுடன் இணைக்க கடைசி நாள் என்று செய்தி வெளியானது. இதனால் இதுவரை ஆதார் கார்டு பெறாதவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி குழப்பத்தைப் போக்கிடும் வகையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து முறையான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
உணவுத்துறை அறிவிப்பு
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் கார்டு
நாடு முழுவதும் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் காலக்கெடு டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. 2017ம் ஆண்டு முதல் புதிய ரேஷன்கார்டு ஸ்மார்ட்கார்டு வடிவில் வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில், ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதார் எண் அவசியம்
ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால் இதற்காக காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழக்கம்போல் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.
கடும் நடவடிக்கை
ஸ்மார்ட் கார்ட் பெற, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தமிழக உணவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், ஆதார் அட்டையைக் கொண்டு வந்தால்தான் ரேஷன் பொருட்களைத் தருவோம் என்று கடைக்காரர்கள் கூறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications