மன இறுக்கத்தால் தவித்துக்கொண்டிருந்த காதல் விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் படத்தில் நடித்த நடிகர் விருச்சிக காந்த், பெற்றோரை இழந்ததால் மன இறுக்கம் ஏற்பட்டு அநாதரவாக சுற்றிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டுபிடித்து நடிகர் அபி சரவணன் உதவி செய்து, படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

நடிகர் விருச்சிக காந்த், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். 'நான் எல்லாம் ஸ்ட்ரெயிட்டா ஹீரோ தான்' என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்றார்.

 Actor Abi Saravanan helped 'kadhal' movie comedian Viruchika kanth

இவர் தன் பெற்றோர் அடுத்தடுத்து இறந்துவிட்ட காரணத்தால், மன இறுக்கத்தால் யாருமில்லாமல் சூளையில் உள்ள ஒரு கோயில் வாசலில் படுத்துறங்கி வாழ்ந்து வந்தார். அவர் அநாதரவான நிலையில் இருந்த வீடியோ ஒன்று சமீபத்தில் வைரல் ஆனது. அதனைப் பார்த்த நடிகர் அபி சரவணன் அவருக்கு ஆடைகள் செல்போன் வாங்கிக்கொடுத்து அவர் நடிக்கும் 'சூறாவளி' என்ற படத்தில் வாய்ப்பும் கொடுத்து உதவியுள்ளார்.

நடிகர் அபி சரவணன் பட்டதாரி, இவன் ஏடா கூடமானவன், மற்ரும் மலையாளத்தில் பிரிட்டிஷ் பங்களா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் நடிகர் தீனா, விருச்சிக காந்தை தன் சொந்த சகோதரன் போல் கவனித்துக்கொள்வேன் என கூறியுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Abi Saravanan helped 'kadhal' movie comedian Viruchika kanth by giving food, dress and cellphone. And he also gave a chance to act in his movie Sooravali.
Please Wait while comments are loading...