அதாவது கமல்தான் எம்ஜிஆராம்.. முதல்வராவதும் உறுதியாம்.. நாங்க சொல்லலை.. ஜோசியர் சொல்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் கட்சித் தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்று டெல்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் கணித்து கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகர் கமல் டுவிட்டரில் முன்வைத்த வண்ணம் இருந்தார். இது ஆட்சியாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை ஆட்சியாளர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதிக்கும் அளவுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ரஜினிகாந்தை போல் நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

 நேரடி களத்தில் கமல்

நேரடி களத்தில் கமல்

இத்தனை நாள்களாக விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் என குரல் கொடுத்து வந்தார் கமல். வல்லூர் அனல்மின் நிலையத்தின் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதாக தெரிவித்த கமல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சென்று களத்தை நேரில் பார்வையிட்டார்.

 கிண்டல் கேலிக்குள்ளான கமல்

கிண்டல் கேலிக்குள்ளான கமல்

கட்சித் தொடங்குவதற்கு தொண்டர்கள் எவ்வளவு காசு கேட்டாலும் கொடுப்பார்கள் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு கமல் தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக ஆட்சியாளர்களின் கிண்டலுக்கு உள்ளானார். மேலும் கமல் கட்சி ஆரம்பித்தால் ஒரு கவுன்சிலராகக் கூட முடியாது என்று கிண்டல் செய்தனர்.

 முதல்வர் பதவி வெயிட்டிங்

முதல்வர் பதவி வெயிட்டிங்

அரசியலில் அவர் சிவாஜி, விஜயகாந்த், ராமராஜன், பாக்யராஜ் போல் காணாமல் போய்விடுவார் என்றும் சிலர் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் ஜோதிடர் ஒருவர் கமலின் ஜாதகத்தை கணித்து அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவார் என கூறியுள்ளார்.

 ஸ்டாலினை விட அதிக வாக்குகள்

ஸ்டாலினை விட அதிக வாக்குகள்

ஜோதிடர் ராடன் பண்டிட் கூறுகையில், கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம். அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார். கமல்ஹாசனின் ஜாதகம் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப்போல இருக்கிறது.

ஆரோக்கியமாக இருப்பார்

கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்ற நிலையில் இனிமேல் அவர் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்கான வாழ்க்கையாக இருக்கும். அவர் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலையெல்லாம் ராடன் பண்டிட் அவருடைய யூடியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.

சரிங்க ஜோசியரே, பகுத்தறிவாளரான கமல் இந்த கணிப்புகளை ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Astrologer Radhan Pandit has said that actor Kamalhassan will become the CM of Tamilnadu as his horoscope is like MGR's one.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X