இந்து தீவிரவாதம்- நடிகர் கமல்ஹாசனுக்கு காமெடி நடிகர் கருணாகரன் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு!- வீடியோ

சென்னை: இந்து தீவிரவாதம் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் கருத்துக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சாமி ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளோ கமல்ஹாசனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு இருக்கின்றன.

Actor Karunakaran supports Kamal Haasan

இதற்காக கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நகைச்சுவை நடிகர் கருணாகரனும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள், டிவி சேனலில் நேரலையாக விவாதம் நடத்தி அவர் கூறியது தவறு என நிரூபிக்கட்டும் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Commedy Actor Karunakaran also supported to Actor Kamal Haasan on hindu terror row.
Please Wait while comments are loading...