மோடி நிகழ்ச்சியில் மகள், மருமகனுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடி நிகழ்ச்சியில் மகள், மருமகனுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு!- வீடியோ

  சென்னை : பிரதமர் பங்கேற்ற தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய மகள் ஐஷ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோருடன் பங்கேற்றார்.

  தினத்தந்தியின் பவளவிழா கொண்டாட்டம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் பங்கேற்கும் நரேந்திர மோடி இன்று காலையில் சென்னை வந்தார்.

   Actor Rajinikanth in PM's function at Chennai

  சென்னை விமானநிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வந்து அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் பிரதமர் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுகவின் அமைச்சர்கள் மற்றும் எம்பிகள் வந்திருந்தனர்.

  இதே போன்று திமுகவின் துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நடிகர்கள் சரத்குமார், பிரபு, சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஷ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோருடன் பங்கேற்றார். பார்வையாளர்கள் வரிசையில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களுடன் அமர்ந்து விழாவில் கலந்துகொண்டார். இதே போன்று அப்பலோ தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் பல்வேறு திரைத்துறை சார்ந்தவர்கள், தொழில்துறையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai, Madras university centenary hall is filled with celebrities for Thanthi platinum jubbilee celebration, PM participating in this function actor Rajinikanth is present in the hall.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற