நீங்கள் எடுத்திருப்பது சரியான நிலைப்பாடே...கமலை வாழ்த்திய குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கமல்ஹாசன் மாற்றத்திற்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக பேஸ்புக் பக்கத்தில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியதில் தொடங்கி, ஊழல் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் முறையில் தெரிவியுங்கள் என்று கூறியது வரை அரசியலில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Actor tuned politician Kushboo holds hands for Kamalhaasan

அரசியலுக்கு நான் என்றோ வந்துவிட்டேன் என்றும் ஊழல் குறித்து பிரகடனப்படுத்துவேன் என்று அவ்வபோது கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிடும் ட்வீட்டுகளால் அவரைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஓன்றரை கோடி பேராக அதிகரித்தது.

நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தாலும், ஆளும் கட்சியின் அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி மற்றும் பாஜகவின் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Actor tuned politician Kushboo holds hands for Kamalhaasan

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு முகநூலில் ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் என்னுடைய நண்பரே உங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்...உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ...விளிம்பு நிலையில் இருக்கும் அமைப்புகளும், தோல்வியைத் தழுவும் அரசியல் கட்சிகளும் உங்களுடைய தோளில் 2 நிமிட விளம்பரத்திற்காக ஏறிச் செல்ல நினைக்கின்றன...நீங்கள் சரியான நிலைப்பாட்டில் உள்ளீர்கள், நானும் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.

உங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே உண்டு....தூற்றும் பேச்சுகள், மாற்றத்திற்காக போராடும் உங்களும் நம்பிக்கையையும் யாராலும் அசைக்க முடியாது...உங்களுக்கு என்னுடைய அன்பு எப்போதும் இருக்கும், என்று பதிவிட்டுள்ளார். அதோடு கமல்ஹாசனுடன், நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் முகநூலில் பதிவட்டுள்ளார்.

Pro Kabaddi 2017, Kamal, Sachin participated in Tamil Thalaivas's function-Oneindia Tamil

மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்த போதும் மத அமைப்புகளால் சர்ச்சை எழுப்பப்பட்டது. அப்போதும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் குஷ்பு. இவர் சக நடிகை என்ற ரீதியில் தனது ஆதரவை தெரிவித்தாரா, அல்லது தனக்கு கட்சிக்கு கமல்ஹாசனை இழுக்கும் விதமாக இந்த ஆதரவுக் கரத்தை நீட்டினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor and politician Kushboo sundar quotes in her fb that she is always in support of Kamalhaasan and the fight for a change would not shaken
Please Wait while comments are loading...