For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொட்டைத் தலையுடன் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சிப் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

ADMK election offices opend in RK nagar

எனவே, அத்தொகுதியில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகத் தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அதிமுக .தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நாடாளுமன்ற துனை சபாநாயகர் தம்பிதுரைமதுரை மேயர் ராஜன் செல்லப்பா, அரசு தலைமை கொறடா மனோகரன்,. சி.வி.சண்முகம் எம். எல்.ஏ. முன்னாள் எம்.பி. ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADMK election offices opend in RK nagar

இதேபோல், சமுக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி பொறுப்பில் உள்ள 42வது வார்டில் உள்ள தேர்தல் பணி மனையை வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எடப்படி பழனிச்சாமி, தங்கமணி, ஆயிரம் விளக்கு பகுதி கழக செயலாளர் நுங்கைமாறன், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஏ. அர்ஜூனன், பேரவை மாவட்ட செயலாளர் ரவிகுமார், முன்னாள் எம்.பி. சிட்லப்பக்கம் ராஜேந்திரன், வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், பாலசுப்ரமணியன், கவுன்சிலர்கள் அஞ்சுலட்சுமி ,கற்பகம், வேளங்கண்ணி, புஷ்பாநகர் ஆறுமுகம், சின்னையன், சாந்திபாஸ்கர், பாலாஜி, பூபதி, ஆனந்தராஜ், ஸ்ரீதர், சிவாஜி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADMK election offices opend in RK nagar

சமீபத்தில் திருப்பதி போய் மொட்டை போட்டுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். அதன் பின்னர் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Tamilnadu finance minister O.Panneer Selvam, housing minister Vaithiyalingam opened the ADMK election offices in R.K.nagar for by poll work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X