நமது எம்ஜிஆரை கபளீகரம் செய்த சசிகலா குடும்பத்துக்கு புது நெருக்கடி- அதிமுக நிர்வாகிகள் வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டை கைப்பற்றியுள்ள சசிகலா குடும்பத்துக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நமது எம்ஜிஆர் நாளேட்டின் பங்குதாரர்களான அதிமுக நிர்வாகிகள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு தொடங்கி 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாளேட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்கள் உள்ளனர்.

ADMK functionaries move to court on Dr Namadhu MGR Daily row

ஒரு பங்கின் விலை ரூ18,000 என்ற வகையில் பங்குதாரர்கள் உருவாக்கப்பட்டனர். இந்த பங்குதாரர்கள் பட்டியல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவை மறைவைத் தொடர்ந்து டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றி நிர்வகித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் தினகரனுக்குதான் நமது எம்ஜிஆரில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக கட்சிக்குதான் முக்கியத்துவம் தர வலியுறுத்தியும் நமது எம்ஜிஆர் நாளேட்டின் பங்குதாரர்கள் தமிழகம் முழுவதும் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனராம். இது சசிகலா குடும்பத்துக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources Said that AIADMK functionaries will file the case against Sasikala Family for Dr Namadhu MGR Daily.
Please Wait while comments are loading...