பட்ஜெட், தினகரன் புதுக்கட்சி... சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதிமுக எம்எல்ஏக்கள் செயல்படும் விதம் குறித்து ஆலோசிப்பதற்காக நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எம்எல்ஏக்கள் செயல்படும் விதம் குறித்து வழக்கமாக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது அன்றைய தினமோ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இதே போன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADMK mlas meeting at Chennai royapettah party headquarters tomorrow

இந்த கூட்டத்தின் போது பட்ஜெட் அம்சங்கள், காவிரி மேலாண்மை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் டிடிவி தினகரன் நாளை புதிய கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அது குறித்தும் எம்எல்ஏக்களுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK mlas meeting at Chennai royapettah party headquarters to discuss about the budget session and also about TTV Dinakaran's new party announcement it seems.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற