"அதிமுக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா" கோஷத்துக்கு முற்றுப்புள்ளி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

  சென்னை: அதிமுக கட்சி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் இனி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. இதன் பிறகு ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். தலைமை செயலகத்தில் அறை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில்தான் அவருக்கு அறை கிடைத்தது.

  இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா நீடிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  தேர்தல் ஆணையம் முடக்கியது

  தேர்தல் ஆணையம் முடக்கியது

  இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி, ஓபிஎஸ் என இரு அணிகளும் சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதுதொடர்பாகவும் இரு அணிகளும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

  இரு அணிகளும் இணைப்பு

  இரு அணிகளும் இணைப்பு

  அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து பொதுக் குழு கூடியது. அதில் பொதுச் செயலாளர் என்றால் அது ஜெயலலிதாதான். எனவே அந்த பதவி இனி அதிமுகவில் இருக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகல்களுடன் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த இரட்டை இலை சின்னத்தை வாபஸ் பெற்று ஒன்றாக தாக்கல் செய்தனர்.

  மீண்டும் துளிர் விட்ட சின்னம்

  மீண்டும் துளிர் விட்ட சின்னம்

  தினகரன் அணியனர் எப்போது பேசினாலும் தியாகத் தலைவி பொதுச் செயலாளர் சின்னம்மா என்றே குறிப்பிட்டு வந்தனர். அதேபோல் தினகரனும் தன்னை அவ்வப்போது துணை பொதுச் செயலாளர் என்றும் கூறிக் கொள்வார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி- பன்னீர் அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

  சசிகலா பொதுச் செயலாளர் இல்லை

  சசிகலா பொதுச் செயலாளர் இல்லை

  இனி சசிகலாவை பொதுச் செயலாளர் என்று அழைக்க முடியாதா. டிடிவி தினகரனுக்கு மூச்சுக்கு 300 முறை பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் என்றே கூறி வரும் நிலையில் இனி அவ்வாறு கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As the Election commission has alloted twin leaves to Edappadi- Sasikala team, then what about ADMK's General Secretary post?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற