For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிமுக- 21, திமுக 10 இடங்களில் வெல்லும்: ஏ.பி.பி. நியூஸ்- நீல்சன் கருத்து கணிப்பு

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 21, திமுக 10 தொகுதிகளில் வெல்லும் என்று ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

134 தொகுதிகளில்..

134 தொகுதிகளில்..

தென் மாநிலங்களில் 134 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 35, பாஜக கூட்டணி 21 இடங்களிலும் வெற்றிபெறும். தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் அதிகபட்சமாக 79 தொகுதிகளைக் கைப்பற்றக்கூடும் என்கிறது கருத்து கணிப்பு.

அதிமுகவுக்கு 21

அதிமுகவுக்கு 21

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 21 இடங்களை அதிமுக கைப்பற்றும் என்கிறது நீல்சன் கருத்து கணிப்பு.

திமுகவுக்கு 10

திமுகவுக்கு 10

திமுக இத்தேர்தலில் 10 தொகுதிளில் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

காங்கிரஸுக்கு 1

காங்கிரஸுக்கு 1

தமிழகத்தில் காங்கிரஸுக்கு கட்சி அனேகமாக 1 இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

ஆந்திராவில் ஜெகன் ராஜ்ஜியம்

ஆந்திராவில் ஜெகன் ராஜ்ஜியம்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 17ல் வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

இங்கு தெலுங்குதேசம் 7, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 7, காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெல்லுமாம்.

கர்நாடகாவில் பாஜக

கர்நாடகாவில் பாஜக

கர்நாடக மாநிலத்தில் 15 இடங்களில் பாஜகவும் 10 தொகுதிகளில் காங்கிரசும் வெல்லுமாம்.

கேரளாவில் காங்கிரஸுக்கு 8

கேரளாவில் காங்கிரஸுக்கு 8

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

English summary
If Lok Sabha elections were to be held today, Jayalalithaa’s AIADMK is seen winning 21 seats out of 39 in Tamil Nadu. DMK gets 10. Congress may win only 1 seat in Tamil Nadu, according to ABP News-Nielsen National Poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X