2015-ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது?- லைவ் ரிப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2015-ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது?- வீடியோ

  சென்னை : 2015 சென்னை பெருவெள்ளத்தின் போது நிரம்பியோடிய ராமாபுரம் அடையாறு கால்வாய்ப்பகுதி இந்த 2 நாட்கள் மழைக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்ற கள நிலவர வீடியோ.

  வடகிழக்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. விடாமல் பெய்த மழையால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். மேலும் மழை இதே போன்று நீடித்தால் 2015ல் ஏற்பட்டது போன்ற பெருவெள்ளம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியும் மக்கள் மத்தியில் இருந்தது.

   Adyar canal bed at Ramapuram how it is now after 2 years of chennai floods video

  ஆனால் இன்று காலை முதல் மழை தணிந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று சாலையில் தேங்கி இருக்கும் நீரும் மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றப்படுகின்றன.

  2015 பெருவெள்ளத்தின் போது நீரை வாரி இழுத்துக் கொண்டு சென்னை நகருக்குள் சென்றது செம்பரம்பாக்கத்தில் திறந்து விடப்பட்ட நீர். ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள அடையாறு கால்வாய்ப் பகுதி இன்று எப்படி இருக்கிறது என்ற ஒரு கள ஆய்வில், மழை நீர் சராசரி அளவிலேயே சென்று கொண்டிருக்கிறது.

  2015 வெள்ளத்திற்குப் பிறகு இந்தக் கால்வாயில் ஆகாயத் தாமரைச் செடிகள் நீக்கப்பட்டு, கால்வாய் ஆழமாகவும், அகலமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கையாக மக்கள் இருப்பதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 4 வரை கனமழை இருக்கும் என்று விடுத்ததை பீதியாகாமல் தகுந்த முன்ஏற்பாடுகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  How Adyar canal bed at Ramapuram today as Chennai flodds 2015 caused severe damage in this area, a live report of tamil one india.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற