For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

37 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக வசமான நீலகிரி தொகுதி!

By Mathi
Google Oneindia Tamil News

உதகமண்டலம்: நீலகிரி லோக்சபா தொகுதியை 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கிய ஆ.ராசா மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டதால் நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான கோபாலகிருஷ்ணன் தோற்கடித்துள்ளார்.வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே முன்னிலை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன், 20-ஆவது சுற்று முடிவில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நீலகிரி தொகுதியில் நீலகிரி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுடன் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் சில சட்டசபை தொகுதிகளும் அடங்கியுள்ளன. அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி தொகுதியில் 39,404 வாக்குகளும், ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் தொகுதியில் 29,257 வாக்குகளும், கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் தொகுதியில் 28,079 வாக்குகளும் கூடுதலாக பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உதகை தொகுதியில் 9,931 வாக்குகளும், குன்னூர் பேரவைத் தொகுதியில் 1,539 வாக்குகளும் கூடுதலாகப் பெற்றார்.

ஆ.ராசாவுக்கு கூடாலூரில் கூடுதல்

இருப்பினும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவைவிட கோபாலகிருஷ்ணன் 2,814 வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளார்.

தபால் வாக்குகளில் ஆ.ராசா

தபால் வாக்குகளைப் பொருத்தமட்டிலும், மொத்தம் பதிவான 2,469 வாக்குகளில் 417 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவற்றில் திமுகவின் ஆ.ராசா 1,486 வாக்குகளையும், அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் 430 வாக்குகளையும், ஆம் ஆத்மியின் ராணி 27 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் காந்தி 22 வாக்குகளையும் பெற்றனர். "நோட்டா'வுக்கு 64 வாக்குகள் கிடைத்தன.

நீலகிரி தொகுதியில் கடந்த 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னர் போட்டியிட்ட அதிமுகவுக்கு தற்போது மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட அதிமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் நீலகிரி தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற இறுதி வாக்குகள் வருமாறு:

சி.கோபாலகிருஷ்ணன் (அதிமுக) - 4,63,700

ஆ.ராசா (திமுக) - 3,58,760

பி.காந்தி (காங்கிரஸ்) - 37,702

எம்.டி.ராணி (ஆம் ஆத்மி) - 12,525

எம்.கலா (பகுஜன் சமாஜ்) - 3,377

பொன்னுசாமி - சி.பி.எம் (எம்.எல்) 2733

பாலன் (சுயேட்சை) 2704

சுப்பிரமணியன் (சுயேட்சை) 1711

டி.ஈஸ்வரன் (மக்கள் மாநாடு கட்சி) - 1,655

கே.குணசேகரன்- (இந்திய குடியரசு கட்சி) - 1,650

நோட்டா - 46,559.

English summary
After 37 years,the Nilgiris constituency gets AIADMK MP in the Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X