7 முறை வென்று அ. தி.மு.க.வின் கோட்டையாக திகழும் ஸ்ரீரங்கம்!
ஸ்ரீரங்கம்: இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் 7 முறை அண்ணா தி.மு.க. வென்று அதன் கோட்டையாக வைத்திருக்கிறது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் வெல்லும் முனைப்புடன் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க.
2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமது சட்டசபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறும் என்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் சம்பத் அறிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இதுவரை 7 முறை அண்ணா திமுகவும் காங்கிரஸ் 4 முறையும் (3 முறை காங்கிரஸ்- 1 முறை ஸ்தாபன காங்கிரஸ்). தி.மு.க., ஜனதா தள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிற்றம்பலம் வென்றார். இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்றவர்கள்:
1952- சிற்றம்பலம் (கம்யூனிஸ்ட் கட்சி)
1957- கே. வாசுதேவன் (காங்கிரஸ்)
1962- என். சுப்ரமணியன் செட்டியார் (காங்கிரஸ்)
1967- எஸ். ராமலிங்கம் (காங்கிரஸ்)
1971- ஜோதி வெங்கடாசலம் ( ஸ்தாபன காங்கிரஸ்)
1977- ஆர். சவுந்திரராஜன் (அண்ணா தி.மு.க)
1980 - ஆர். சவுந்திரராஜன் (அண்ணா தி.மு.க)
1984- ஆர். சவுந்திரராஜன் (அண்ணா தி.மு.க)
1989- வெங்கடேச தீட்சிதர் ( ஜனதா தள்)
1991- கு.ப. கிருஷ்ணன் (அண்ணா தி.மு.க.)
1996- டி.பி. மாயவன் (தி.மு.க.)
2001 - கே.கே. பாலசுப்பிரமணியன் ( அண்ணா தி.மு.க.)
2006- எம். பரஞ்ஜோதி ( அண்ணா தி.மு.க.)
2011- ஜெயலலிதா (அண்ணா தி.மு.க.)
கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு விவரம்:
ஜெ. ஜெயலலிதா (அண்ணா தி.மு.க) : 1,05,328
என். ஆனந்த் ( தி.மு.க) 63, 480
மொத்தம் 41, 848 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் பிற கட்சிகள் பெற்ற வாக்குகள்:
கே.ஏ.எஸ். அறிவழகன் (பாரதிய ஜனதா கட்சி) - 2,017
தமிழரசி (இந்திய ஜனநாயகக் கட்சி) - 1,221
நடராஜன் (பகுஜன் சமாஜ்) - 928
என். ரவிசங்கர் ஐயர் (அகில பாரதிய ஹிந்து மகாசபா) - 738
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications