For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சியினரும் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    11 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்- வீடியோ

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    All party heads demands Cauvery Management board

    இதில் திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அதில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு திமுக உறுதுணையாக நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    அதுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.

    மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். மாநில உரிமைகளை விட்டு தரக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

    English summary
    All party leaders demands to set up Cauvery Management board. For this they demands to meet PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X