ரெய்டிலும் ஸ்கோர் செய்த ஜெயா டிவி.. செய்தி சேகரிக்கச் சென்றவர்களுக்கு சாப்பாடு போட்டு அசத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ

சென்னை: ஜெயா டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வருமான வரி சோதனைச் செய்தியை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு வேலை தவறாமல் காபி, உணவு கொடுத்து செமத்தையான உபசரிப்பு செய்துள்ளது அந்த நிர்வாகம்.

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்திற்கு இன்று காலையில் நுழைந்த வருமான வரித்துறையினரின் சோதனையை முதலில் அந்த தொலைக்காட்சியே பிரேக்கிங்காக ஓட விட்டது.

இதனையடுத்து தேனி போல சுறுசுறுப்பாகின மீடியாக்கள். ஜெயா டிவி அலுவலகம் முன்பு செய்தியாள்கள் குவிந்து விட்டனர்.

 ஊரெல்லாம் சோதனை

ஊரெல்லாம் சோதனை

தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு பொந்தில் இருந்து வெளிவரும் குளவி போல தமிழகத்தில் உள்ள சுத்துப்பட்டு அத்தனை ஊர்களிலும் சசிகலா குடும்பத்தினரை அமுக்கிப் போட்டு வருமான வரித் துறை சோதனை நடத்தும் செய்தி வெளியானது.

 காலையிலிருந்து ஜெயா டிவியில்

காலையிலிருந்து ஜெயா டிவியில்

எனினும் ஜெயா டிவி அலுவலகத்தில் காலையில் தொடங்கிய சோதனை இன்னும் முடிந்த பாடில்லை, அந்த நிறுவனத்தின் முன்னாள் மேலாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் வரவழைத்து கணக்கெடுப்புப் பணியை செய்து வருகின்றனர் வருமான வரித்துறையினர். இதனால் காலை முதலே மீடியாக்களின் செய்தியாளர்கள் ஜெயா டிவி அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

 சாப்பாடு போட்டு கவனிப்பு

சாப்பாடு போட்டு கவனிப்பு

செய்தி சேகரிக்க சென்றவர்கள் சோர்ந்துவிடாமல் இருக்க ஜெயா டிவி நிர்வாகம் சார்பில் சிறப்பான விருந்து உபச்சாரம் செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு சூடான டீ, காபி ஊடகத்தினருக்கு பரிமாறப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மணியளவில் தக்காளி சாதம், கலவை சாதம், வெஜிடபிள் பிரியாணி என்று உணவு அளிக்கப்பட்டுள்ளது.

குளுக்கோசும் கொடுத்து கலக்கல்!

இதோடு நின்றுவிடவில்லை மாலை 5.30 மணியளவில் டாடா குளுக்கோ பிளஸ் பானம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் அந்த நேரத்திலும் ஸ்கோர் செய்வதில் சசிகலா குடும்பம் படு உஷாராகத் தான் இருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amidst Income tax raids at Jaya tv office at Chennai Ekkatuthangal office, management provides highfi hospitality service to the press people who came for IT raid coverage.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற