இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம்- அமித்ஷா பரபரப்பு பேச்சு

சென்னை: இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்தான் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தமிழகத்தில் வியூகம் வகுக்க அமித்ஷா சென்னை வந்துள்ளார். இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்போம். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவோம்.

சொர்க்கத்தில் இடம்
தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி பேச்சு உள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் எங்கே இருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் பார்ப்பார்கள். விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

பாஜக
இந்தியாவில் தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஓட்டுக்கு நோட்டு
4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.5.10 லட்சம் கோடி நிதியுதவியை பாஜக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையை மாற்ற வேண்டும்.

பாஜக வெற்றி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.15000 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாதம், வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

திருக்குறள் மேற்கோள்
அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதல் தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் அமித்ஷா பட்டியலிட்டார். எதிர்ப்பாளர்களுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி அமித்ஷா பேசினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!