மரித்துப்போனதா மனித நேயம்? நெல்லை அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பரிதாபம்! அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்-வீடியோ

  நெல்லை: பராமரிக்க ஆள் இல்லாததாலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசிசென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத முதியவர், ஆதரவற்ற நிலையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது வேலையை அவரால் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

  An oldman was thrown away near dump in Thirunelveli

  இந்நிலையில் அவரின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாக இருந்த அவர் படுத்த படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழித்தார். அவரை பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை.

  இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் இன்று காலை அவரை ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

  இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட நபரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  அரசு மருத்துவமனையே நோயாளியை குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An oldman who was getting treatment in Tirunelveli Government Hospital was thrown away in dump because of he is an orphan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற