காவிரி விவகாரத்தில் எம்பி பதவியை முதல் ஆளாக ராஜினாமா செய்ய தயார்- அன்புமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: காவிரி விவகாரத்தில் எம்பி பதவியை முதல் ஆளாக ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

முரணாக பேசிய மத்திய அரசு

முரணாக பேசிய மத்திய அரசு

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காவிரி நீர் தொடர்பாக குழுவை அமைக்கதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு முரணாக தெரிவித்துவிட்டது.

முதல் ஆளாக எம்பி பதவி ராஜினாமா

முதல் ஆளாக எம்பி பதவி ராஜினாமா

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால் தமிழக அரசு கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் கோவையில் அன்புமணி ராமதாஸ் கூறுகையில் காவிரி விவகாரத்தில் முதல் ஆளாக நான் எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயார்.

ஒரு நெருக்கடியை உருவாக்குவோம்

ஒரு நெருக்கடியை உருவாக்குவோம்

எல்லாரும் வாங்க ராஜினாமா செய்வோம். ஒரு நெருக்கடியை உருவாக்குவோம். தமிழகத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.

அரசியல் சாசன நெருக்கடி

அரசியல் சாசன நெருக்கடி

அதுமட்டுமல்லாமல் தமிழக சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும். அப்படியிருந்தால்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anbumani Ramadoss says that he is ready to resign his MP post for Cauvery issue. All the MPs should resign their post and give pressure to Central Government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற