For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்குடியில் டெங்குக் காய்ச்சலுக்கு இளைஞர் பலி - வீடியோ

காரைக்குடியில் தனியார் மருத்துவமனை ஊழியர் டெங்குக் காய்ச்சலுக்கு பலியானார்.

By Suganthi
Google Oneindia Tamil News

காரைக்குடி: டெங்குக் காய்ச்சலால் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து டெங்குக் காய்ச்சல் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் டெங்குக் காய்யசலுக்கு பலியானார்கள். அவர்களில் பள்ளி சிறுவர்கள் அதிகம்.

Another man victimized for Dengue fever in Karaikudi

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பலர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பின்னர் அங்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு டெங்குக் காய்ச்சலல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாறிவரும் பருவநிலையால் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் மக்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காரைக்குடியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரின் மகன் கார்த்தி தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பருவமழை தொடங்குவதற்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர், செயலர், அதிகாரிகள் நோய்த்தொற்று தடுப்பு குறித்து கூடி விவாதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம்.

English summary
An youngster Karthi died in dengue fever in Karaikudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X