For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயப்ப சீசன்... முட்டை விலை சரிவு - ஆம்லேட் விலை குறையுமா?

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.85 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.85 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகபட்சமாக ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லறை விலையில் ஒரு முட்டை 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Ayyappa season...Egg rate gets slashed down in Namakkal

ஹோட்டல்களில் ஆம்லேட், ஆப்பாயில், கலக்கி, பொடிமாஸ் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்தன.

முட்டை விலை நேற்று 11 காசுகள் குறைந்து ரூ.5.05 ஆன நிலையில் இன்று மேலும் 20 காசுகள் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.4.85 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்ந்த உடனேயே ஹோட்டல்களில் முட்டை சேர்த்து செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்தியவர்கள் மீண்டும் விலையை குறைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
The National Egg Coordination Committee at Namakkal has revised egg rates and reduced by 0.20 paise. Accordingly, the farm purchase price of an egg is fixed as 485 paise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X