For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக பற்றி கருத்து சொல்வேன்.. யாரும் தடுக்க முடியாது: கருணாநிதிக்கு அழகிரி பதிலடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அழகிரி. இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, அது பொருந்தாத கூட்டணி என்றும், திமுக இப்போதுள்ள நிலையில், எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும், பலம்மிக்க அதிமுகவை வீழ்த்த முடியாது என்று கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த கருணாநிதி, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, கட்சியின் வளர்ச்சியை கெடுக்கும் வகையிலும், எழுச்சியை குலைக்கும் வகையிலும் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அழகிரிக்கு தொடர்பில்லை

அழகிரிக்கு தொடர்பில்லை

கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், அழகிரிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை அந்த கூட்டணி வெல்ல முடியாது என்றும் கூறியிருப்பது, யாராலும் ஏற்க முடியாது.

அலட்சியம்

அலட்சியம்

அழகிரி செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை, அலட்சியப்படுத்த வேண்டும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு

ஸ்டாலினுக்கு பாராட்டு

அழகிரியை அலட்சியப்படுத்த கூறிய அதே அறிக்கையில், ஸ்டாலினின், 'நமக்கு நாமே' பயணம் வெற்றி பயணம்; தி,மு.க., வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம். இந்த பயணம், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்; அவரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்றும் கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.

கேட்க முடியாது

கேட்க முடியாது

இது அழகிரிக்கு மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது. இததுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அழகிரி கூறியுள்ளதாவது: தி.மு.க., பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன், பலமுறை சிறை சென்றுள்ளேன்.

தப்பு செய்துள்ளேன்

தப்பு செய்துள்ளேன்

நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால், கட்சியைப் பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

English summary
M.K.Azhagiri says he has the rights to ask questions about DMK moves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X