அரசு பொருட்காட்சி விழாவில் நடன மங்கையின் பெல்லி டான்ஸ்.. அதிர்ந்து போன பள்ளி குழந்தைகள்

சென்னை: நாமக்கல்லில் நடந்த அரசு பொருட்காட்சியில் ஆபாச வகையில் நடன மங்கை பெல்லி நடனம் ஆடிய வீடியோ இப்போது வைரலாக சுற்றுகிறது.
நாமக்கல்லில் கடந்த ஜனவரி மாதம் அரசு பொருட்காட்சி நடைபெற்றது. அப்போது முதல்வராக பன்னீர்செல்வம் பதவி வகித்தார்.

அப்போது விழா மேடையில் வெளிநாட்டு அழகி பெல்லி நடனம் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த பள்ளி மாணவ, மாணவிகள் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தனர். சிலரோ என்னடா நடக்குது இங்கே என்ற பாணியில் நடப்பது தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதுதான் 'பொருட்காட்சியா' என்ற கேள்வியோடு அதை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் உண்டு. இது பழைய தகவல்தான் என்றபோதிலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அந்த குத்தாட்ட வீடியோ இப்போது மீண்டும் வைரலாக சுற்றி வருகிறது.
ஆர்.கே.நகரில் வீதி வீதியாக அதிமுக சார்பில் குத்தாட்ட கலைஞர்கள் ஆடிப்பாடி வரும் நிலையில், இந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட கூடாது. கண்ணியம் காப்பது அவசியம் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.