For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்: வைகோ

|

புதுக்கோட்டை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ இது குறித்துக் கூறியதாவது:-

கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி டாக்டர் அம்பேத்காரின் கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறியது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

vaiko

தமிழக மீனவர்களின் வாழ்வாதரங்களை வஞ்சிக்கும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும் அதற்கு உடந்தையாக இருக்கும் காங் கிரஸ் அரசு தற்போது இலங் கைக்கு ராணுவ கப்பலை தருவதற்கு துடிக்கிறது. இதை தடுக்க காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்.

இலங்கையில் நடந்த போரின் போது விடுதலை புலிகளுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் கொடுஞ்செயல் செய்தது காங்கிரஸ் அரசு தான். இத்தகைய செயலை செய்த காங்கிரஸ் அரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்காமல் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பணம் வெள் ளமாக பாய்ந்தாலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்று மாறி மாறி வென்ற காலம் மாறும்.

எனவே புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The MDMK general secretary Vaiko is confident that the BJP alliance win in all the fourty constituencies in Tamilnadu in the Lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X