அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்
ராஜபாளையம்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பது அறிவிக்கப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என பிரசாரம் செய்வதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன.

தொகுதி பங்கீடு
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக, தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரங்களும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளது.

சேப்பாக்கம் குஷ்பு
இந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் சில தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கெளதமி முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

ராஜபாளையம் நடிகை கெளதமி
இதனிடையே ராஜபாளையத்தில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் தொகுதி வேட்பாளரான கெளதமி வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

அதிமுகவினர் அதிர்ச்சி
தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதியை பாஜகவே எடுத்துக் கொண்டிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போடியிட ஆலோசித்து வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராஜபாளையம் தொகுதிக்கு வேட்பாளரையே பாஜக அறிவித்திருப்பதை எப்படி ஏற்பது என்கின்றனர் அதிமுகவினர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications