For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆல் இந்தியா லெவலில் டிரெண்ட் அடித்த பாஜக... இப்படி நோட்டாகிட்ட மாட்டிகிட்டே!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நோட்டா உடன் போட்டி போடும் பாஜக- வீடியோ

    சென்னை: ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காலையில் இருந்து டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

    ஆனால் பாஜக கட்சியை சேர்ந்த வேட்பாளர் கரு.நாகராஜன் மிகவும் குறைவாக 408 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார். இவர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவிற்கு மொத்தம் 640 வாக்குகள் விழுந்து இருக்கிறது.

    தற்போது இது இந்தியா முழுக்க டிரெண்ட் ஆகி இருக்கிறது. பலரும் நோட்டா வாக்குகளைவிட குறைவாக எடுத்த பாஜகவை கிண்டல் செய்து வருகின்றனர்.

    தமிழ்நாடு பாஸ்

    தமிழ்நாட்டின் அரசியல் குறித்து இவர் பேசியுள்ளார். அதில் ''பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. இப்போது தெரிகிறதா இதுதான் தமிழ்நாட்டு அரசியல்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    கர்நாடக குரல்

    கர்நாடகாவை சேர்ந்த இவர் இப்படி எழுதியுள்ளார் ''தமிழ்நாடு மக்களே, நீங்கள் ஏன் இவ்வளவு சிறப்பாக இருக்கிறீர்கள். இந்தியாவில் வேறு யாருமே மத்திய அரசுக்கு இப்படி பாடம் புகட்டுவதில்லை. கர்நாடகாவை சேர்ந்த நான் உங்களை பார்த்து பொறாமைப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    ஜான் சீனா பாஸ்

    இவர் பாஜக கட்சியை பிரபல டபுள்யூ.டபுள்யூ. இ வீரர் ஜான் சீனாவுடன் ஒப்பிட்டு இருக்கிறார். ஜான் சீனா அடிக்கடி ''யூ காண்ட் சீ மீ'' என்று ''உன்னால் என்னை பார்க்க முடியாது'' என்பார். அது போலவே பாஜக கட்சி தமிழ்நாட்டில் இருப்பதையும் யாராலும் பார்க்க முடியவில்லை என்று கலாய்த்து இவர்கிறார்.

    நோட்டா

    ஆர். கே நகர் தேர்தலில் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழிசை குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதை கலாய்த்து ''தமிழிசை: என்ன நோட்-ஆ? மக்கள்: ஆமா நோட்டா!'' என்று சொல்வது போல எழுதி இருக்கிறார்.

    English summary
    BJP got viral in twitter after got veyr lesser vote than NOTA in RK Nager by poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X