For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.. இல.கணேசன் ஒப்புதல்

பா.ஜ.க.,வை ஒரு பொருட்டாகவே மக்கள் கருதவில்லை என்று தமிழக மூத்த பாஜக தலைவரும், எம்பியுமான இல கணே:ன் கூறியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    நோட்டா உடன் போட்டி போடும் பாஜக- வீடியோ

    கோவை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட எங்களை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று பா.ஜ.க எம்.பி இல.கணேசன் தெரிவித்து உள்ளார்.

    ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை குறித்து கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இல.கணேசன் கருத்துகளை தெரிவித்தார். அப்போது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் நின்றதை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    BJP MP Ila Ganaesan says that RK Nagar people didnot mind BJP party in this Bypoll

    மேலும், செல்வி ஜெயலலிதா மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது. அவரது பெயரை சொன்னவர்களுக்கு ஒரு லட்சம் வாக்குகள் வரை மக்கள் தூக்கி கொடுத்து இருக்கிறார்கள். தனித்தனியாக இருக்குபோதே இப்படி ஒரு வெற்றி எனில், ஒன்றாக இருந்து இருந்தால் இன்னமும் அதிகம் கிடைத்து இருக்கும்.

    அதனால், கருத்து வேறுபாடுகளை களைந்து அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசிக்க வேண்டும். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை வைத்து ஆட்சிக்கு வரலாம் என்று கனவு கண்ட திமுகவின் தேர்தல் முடிவுகளின் மூலம் பொய்த்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் இந்த நிலைமை மாறும் என்று நான் கருதுகிறேன்.

    தொலைக்காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து அதிமுகவை பாஜக தான் இயக்குகிறது என்று செய்தி வந்ததை மறுக்கவே நாங்களும் போட்டியிட்டு, தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். ஆனால், இவ்வளவு மோசமான தோல்வி ஏன் என்பதை தலைமை விரைவாக குழு ஒன்றை அமைத்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    English summary
    BJP MP L Ganaesan says that RK Nagar people didnt mind our party in Elections. He also added that All the vote bagged by ADMK and TTV Dinakaran are only for the name of Jayalalithaa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X