போகி பண்டிகை.... சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போகி பண்டிகையால் சென்னையில் உள்ள 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுபபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் பழைய பொருள்களை ஆங்காங்கே எரித்தனர். இதனால் சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது.

Bogi festival: Air pollution in 13 Zones of Chennai

தேசிய நெடுஞ்சாலைகளிலும், முக்கிய சாலைகளிலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பனி மூட்டமும் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் கூறுகையில்,
போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது.

கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As today is Bogi celebrated, old things have burnt in all the places. This one causes air pollution in Chennai, says Pollution control Board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X