For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் உருவானது 'மாதி' புதிய புயல்! கனமழை எச்சரிக்கை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டனலம் புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இப்புதிய புயலுக்கு மாதி(MADI) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இப்புதிய புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மாதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Sat Pics

தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.

இருப்பினும் மேல் அடுக்கு சுழற்சியில் காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே இருந்தது. தற்போது அது புயலாக மாறியுள்ளது.

இந்த புயலுக்கு மாதி என பெயரிடப்பட்டுள்ளது. மாதி புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் தீவுகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதி புயல் சென்னையில் இருந்து 500 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் 1-ம் நிலை புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதி புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகை மற்றும் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
India Met Department has issued an alert for cyclone formation in southwest Bay of Bengal, the fourth in the series during the ongoing North-East monsoon It would intensify into a deep depression by Saturday and subsequently into a "Madi" cyclonic storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X