For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்.. இன்று முடிவிற்கு வருகிறதா?

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுக்க போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டம் பெரும்பாலும் இன்று முடிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். இதனால் தற்போது தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் போராட்டம் 8 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்த போராட்டத்திற்கு எதிராக நேற்று உயர்நீதிமன்றத்தில் நடத்த வழக்கில் தமிழக அரசின் 2.44 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை ஏற்க சங்கம் ஒப்புக் கொண்டது. இதனால் போராட்டம் நேற்று கைவிடப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் ஆனால் அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள கோரிக்கை வைத்தனர். அதனால் இன்றும் 8 வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

நேற்றே அரசு 70% பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என கூறிய நிலையில் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இன்று அரசு பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் போராட்டம் கைவிடப்பட வாய்ப்பு உள்ளது.

English summary
Bus strike continues for 8th day in Tamil Nadu. Bus strike makes huge problem to common people. They have suffered due to this strike.Yesterday they have said they back will to work only if goverment talks with them. TN govt told that 70% of workers will back to work today. Workers says that bus strike will continue until all needs has clarified. Temporary bus drivers drives buses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X