சென்னையில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்று குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் நேற்று தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 % ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று சொன்ன அரசு பின்னர் 2.44% மட்டுமே தர முடியும் என்று கூறியதால் அதிருப்தியடைந்த தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

Buses plied in Chennai are in very less number

இதனால் நேற்று முதல் தமிழகத்தில் பேருந்துகள் ஏதும் இயங்கவில்லை. ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிஅடைந்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் கூறிவிட்டனர்.

இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன.

35 சதவீத பேருந்துகளே இயக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவர் என்பது தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Transport staffs continue their strike as their talks with government for revision of pay ends in failure.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற