For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேயர்–நகரசபை தலைவர் பதவி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸியும், நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு புவனேஸ்வரியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள்; நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்; பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேயர் பதவி வேட்பாளர்கள்

கோயம்புத்தூர்-கணபதி ப. ராஜ்குமார், திருநெல்வேலி-புவனேஸ்வரி, தூத்துக்குடி-அந்தோணி கிரேஸி

மாநகராட்சி கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சி 35ஆவது வார்டு-டேவிட் ஞானசேகரன், சென்னை மாநகராட்சி 166ஆவது வார்டு-எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், ஈரோடு மாநகராட்சி 60ஆவது வார்டு-பால சுப்பிரமணியம்
திருப்பூர் மாநகராட்சி 22ஆவது வார்டு-கலைமகள் கோபால் (எ) ஆ.கோபால் சாமி
திருப்பூர் மாநகராட்சி 45ஆவது வார்டு-கண்ணப்பன்

திருச்சி - மதுரை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 15ஆவது வார்டு-ராஜலெட்சுமி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32ஆவது வார்டு-சங்கர், தஞ்சாவூர் மாநகராட்சி 7ஆவது வார்டு-வாசுகி, மதுரை மாநகராட்சி 85ஆவது வார்டு-லதா குமார், மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டு-சண்முகம், திண்டுக்கல் மாநகராட்சி 9ஆவது வார்டு-பாண்டி
தூத்துக்குடி மாநகராட்சி 37ஆவது வார்டு-மாரிமுத்து

நகர மன்றத் தலைவர் பதவி

அரக்கோணம்-கண்ணதாசன், கடலூர்-குமரன், விருத்தாசலம்-அருளழகன், குன்னூர்-சரவணகுமார், புதுக்கோட்டை-ராஜசேகரன், கொடைக்கானல்-ஸ்ரீதர், ராமநாதபுரம்-சந்தானலெட்சுமி, சங்கரன்கோவில்-ராஜலெட்சுமி

செப்டம்பர் 18ல் தேர்தல்

தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது. இதனுடன் 8 நகராட்சி தலைவர் பதவிக்கும், சில உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கடலூர், விருத்தாசலம், ராமநாதபுரம், சங்கரன்கோவில், கொடைக்கானல், புதுக்கோட்டை, குன்னூர், அரக்கோணம் ஆகிய 8 நகராட்சியிலும் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந்தேதி கடைசி நாளாகும்.

English summary
AIADMK, Ms Jayalalithaa on Friday released the list of candidates for local bodies including the three Municipal Corporations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X